Tuesday, 17 May 2011

"இன்னா நாற்பது : செய்யுள் 4

"இன்னா நாற்பது : செய்யுள் 4 "

எருதி லுழவர்க்குப்  போகீரமின்னா
கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா
திருவுடை யாரைச்  செறலின்னா வின்னா
பெருவலியார்க் கின்னா செயல்

எருதி லுழவர்க்குப்   = எருது இல் உழவர்க்கு = காளை மாடு இல்லாத உழவருக்கு
போகீரமின்னா  = போக ஈரம்   இன்னா
போக =   விளைவு /(agriculture output)]
( ஈரம் =  பசுமை )
(இன்னா =  துன்பம் )
உரை :
காளை மாடு இல்லாத உழவனுக்கு (நிலத்தின்) பசுமையான விளைச்சல் துன்பம் தரும்.

ஆயுதத்தைக் கைவிட்டுப் புறமுதுகிட்டு ஓடுதல் துன்பம்
கருவிகண்      =  கருவி = ஆயுதம்/கவசம், துணைக் காரணம் ,
மாறி = கைவிடுதல் , /பகைமை கொண்டு
புறங்கொடுத்த லின்னா = புறம் கொடுத்தல் இன்னா = புறமுதுகிடுவது ,/கோள் சொல்வது, துன்பம்
உரை :
ஆயுதத்தைக் கைவிட்டுப் புறமுதுகிட்டு ஓடுதல் துன்பம்
( அல்லது)
துணைக்காரணம்(சுயநலம்) கருதி பகைமை கொண்டு கோள் சொல்வது துன்பம் தரும்.


திருவுடை யாரைச்  = திரு உடையாரை  = செல்வம் உடையவரை
செறலின்னா   =,செறல் இன்னா  = கொல்லுகை /,சினம்  துன்பம்
வின்னா = இன்னா
உரை :
செல்வம் உடையவர்களைக் கொள்வதோ அல்லது அவர்களுடன் சினம் கொள்வதோ துன்பம்  தரும் .

பெருவலியார்க் கின்னா  = பெரும் வல்லமை படைத்தவர்களுக்கு  இன்னா
செயல் = செய்தல்
உரை :பெரும் வல்லமை படைத்தவர்களைக் கொல்வது அல்லது அவர்களுக்குத் துன்பம் செய்தல் போன்றவைகளைச் செய்வது துன்பம் தரும்.
                                                                    உரை

காளை மாடு இல்லாத உழவனுக்கு (நிலத்தின்) பசுமையான விளைச்சல் துன்பம் தரும்.
ஆயுதத்தைக் கைவிட்டுப் புறமுதுகிட்டு ஓடுதல் துன்பம்
( அல்லது)
துணைக்காரணம்(சுயநலம்) கருதி பகைமை கொண்டு கோள் சொல்வது துன்பம் தரும்.
பெரும் வல்லமை படைத்தவர்களைக்  கொல்வது அல்லது அவர்களுக்குத் துன்பம் செய்தல் போன்றவைகளைச செய்வது துன்பம் தரும் .

No comments:

Post a Comment