Tuesday, 10 May 2011

இன்னா நாற்பது - செய்யுள் - 1

இன்னா நாற்பது - செய்யுள் - 1

பந்தமில்லாத மனையின் வனப்பின்னா
தந்தையில்லாத புதல்வனழகின்னா
அந்தண ரில்லிருந் தூணின்னா வாங்கின்னா
மந்திரம் வாயாவிடின் ஊணின்னாது

பந்தமில்லாத = பந்தம் இல்லாத = உறவு/பற்று இல்லாத
மனையின் = மனைவியின்
வனப்பின்னா = வனப்பு இன்னா = அழகு துன்பம்
உரை :
தன்னிடம் உறவும் பற்றும் இல்லாத மனைவியின் அழகு ஒருவனுக்குத் துன்பத்தைத்தரும்.

வள்ளுவர் குறள் : மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
                                      எனைமாட்சித்    தாயினும் இல்
 உரை : இல்வாழ்க்கைக்குத் தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால் ,ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதாயினும் பயன் இல்லை.

தந்தையில்லாத = தந்தை இல்லாத
புதல்வனழகின்னா= புதல்வன் அழகு இன்னா = புதல்வனின் குணம் துன்பம்
உரை:
தந்தையில்லாத மகனின் குணம் அவனுக்குத் துன்பத்தைத் தரும்.
{அதாவது அழகு/குணம் என்பதன் பொருள் ,அவன் தன், தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கவேண்டிய பொருத்தமான குணம்( proper conduct ), ஒழுங்கு முறை ( systamatic and orderly way ) }.

வள்ளுவர் குறள் : தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
                                      முந்தி இருப்பச்செயல்
 உரை :தந்தை தன மகனுக்குச்  செய்யத்தக்க நல்லுதவி ,கற்றவர் குட்டத்தின் தன மகன் முந்தி இருக்கும்படி அவனைக் கல்வியில் மேம்படச்செய்வது .

ஒரு மகனுக்கு இத்தகைய  நல்ல குணங்களைக் கற்றுக்கொடுக்க வழிகாட்டும்  தந்தை இல்லாவிட்டால் இவன் வாழ்வு  இவனுக்குத் துன்பத்தைத் தரும்.

அந்தண ரில்லிருந் தூணின்னா = அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா = அந்தணர் /மேன்மையானவர் வீட்டிலிருந்து உணவு துன்பம்
வாங்கின்னா = பெறுதல் , ,
உரை :
மேன்மையானவரிடமிருந்து /அந்தணரிடமிருந்து உணவை வாங்கிப் பெற்று உண்ணுவது துன்பம் தரும்.(அந்தணர்கள் அன்றய காலக்கட்டத்தில் யாசகம் பெற்று உயிர் வாழ்வோர்.அதனால் அவர்களிடம் இருந்து உணவை பறித்து உண்பது துன்பம் தரும், என்று பொருள் கொள்ள வேண்டும். )

மந்திரம் = வீடு
வாயாவிடின் = நன்கு அமையாவிட்டால்
ஊணின்னாது = ஊண் இன்னாது = உணவு துன்பம் தருவது
உரை :
ஒருவனுக்கு வீடு நன்கு அமையாவிட்டால் அந்த வீட்டில் இருந்து உணவு உண்பது துன்பத்தைத்தரும்.
                                                                 உரை

தன்னிடம் உறவும் பற்றும் இல்லாத மனைவியின் அழகு ஒருவனுக்குத் துன்பத்தைத்தரும்.
தந்தையில்லாத மகனின் குணம் அவனுக்குத் துன்பத்தைத் தரும்.
{அதாவது அழகு/குணம் என்பதன் பொருள் ,அவன் தன், தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கவேண்டிய பொருத்தமான குணம்( proper conduct ), ஒழுங்கு முறை ( systamatic and orderly way ) }.
ஒரு மகனுக்கு அவனது தந்தை வழிகாட்டியாக இருந்து கற்றுக்கொடுக்கும் நல்ல குணங்கள் இவனிடம் இல்லாததால் இவன் குணம் இவனுக்குத் துன்பத்தைத் தரும்.
மேன்மையானவரிடமிருந்து /அந்தணரிடமிருந்து உணவை வாங்கிப் பெற்று உண்ணுவது துன்பம் தரும்.(அந்தணர்கள் அன்றய காலக்கட்டத்தில் யாசகம் பெற்று உயிர் வாழ்வோர்.அதனால் அவர்களிடம் இருந்து உணவை பறித்து உண்பது துன்பம் தரும், என்று பொருள் கொள்ள வேண்டும். )
ஒருவனுக்கு வீடு நன்கு அமையாவிட்டால் அந்த வீட்டில் இருந்து உணவு உண்பது துன்பத்தைத்தரும்.
 
No comments:

Post a Comment