முக்கட்பகவனடி தொழா தார்க்கு இன்னா
பொற்பனை வெள்ளியை உள்ளாதொழுகின்னா
சக்கரத்தானை மறப்பின்னா வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு இன்னா
பொற்பன வெள்ளியை மன்றப்பின்னாது

முக்கட் = முக்கண்
பகவனடி = இறைவனடி
தொழா தார்க்கு = தொழாதவர்களுக்கு
இன்னா = துன்பம்
உரை : முக்கண்ணனைத் தொழாதவர்களுக்குத் துன்பம்

பொற்பனை = அழகு மிகுந்த
வெள்ளையை = பல ராமனை அல்லது வெண் சங்கினை
உள்ளாது= எண்ணாது
ஒழுகின்னா= ஒழுகுதல் இன்னா = நடத்தல் துன்பம்

உரை அழகு மிகுந்த பலராமனை எண்ணாது இருபவர்களுக்கும் துன்பம் . )
சக்கரத்தானை = கையில் சக்கரம் உடையவன் = விஷ்ணு
மறப்பின்னா = மறப்பு இன்னா = மறந்துவிடுவது துன்பம்

உரை : ஒரு கையில் வெண் சங்கையும்) ஒரு கையில் சக்கரத்தையும் உடைய விஷ்ணுவை மறந்தவர்களுக்கும் துன்பம்.
வாங்கின்னா சத்தியான் = சக்தியை இடப்பக்கத்தில் உடையவன் (சிவன் )
(வாங்குதல் = ஒரு பக்கத்தில்)
றாடொழா தார்க்கு = தாள் தொழா தார்க்கு ( தாள் + தொழாதார்) = தாளைத் தொழாதவர்க்கு

உரை :திருசிற்றம்பலத்தில் பொன்னாலும் வெள்ளியாலும் ஆன திருச்சபையில் , சக்தியை ஒருபாகமாகக்
கொண்டு வீற்றிருக்கும் ஈசனை தொழாதவர்களுக்கும் துன்பம்.

இன்னா = துன்பம்
பொற்பன = பொன்னாலான
வெள்ளியை = வெள்ளியாலான
மன்றப்பின்னாது = மன்றம் இன்னாது = திருச்சபை = திருச்சிற்றம்பலம்
உரை :
முக்கண்ணனை தொழாதவர்களுக்குத் துன்பம்
(அழகு மிகுந்த பலராமனை எண்ணாது இருபவர்களுக்கும் துன்பம் . )
(அல்லது )
ஒரு கையில் வெண் சங்கையும் ஒரு கையில் சக்கரத்தையும் உடைய விஷ்ணுவை மறந்தவர்களுக்கும் துன்பம்.
திருசிற்றம்பலத்தில் பொன்னாலும் வெள்ளியாலும் ஆன திருச்சபையில் , சக்தியை ஒருபாகமாகக் கொண்டு வீற்றிருக்கும் ஈசனை தொழாதவர்களுக்கும் துன்பம்.