இன்னா நாற்பது : செய்யுள் -2
பார்ப்பாரிற் கோழி யுநாயும் புகலின்னா
ஆர்த்த மனைவியடங்காமை நன்கின்னா
பாத்தில் புடவை (புடைவை )உடை இன்னா வாங்கின்னா
காப்பாற்றா வேந்தனுலகு
உடையின்னாது
பார்ப்பாரிற் = பார்ப்பார் இல் = அந்தணர் இல்லத்தில்
கோழி யுநாயும் = கோழியும் நாயும்
புகலின்னா = புகல் இன்னா = புகுவது துன்பம்
ஆர்த்த = உற்ற/நுகர்ந்த /மணந்த
மனைவியடங்காமை நன்கின்னா = மனைவி அடங்காமை நன்று இல்லை.
உரை : உற்ற மனைவி கணவனுக்கு அடங்காதிருத்தல் துன்பம் தரும்.
குறள் : இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக்கடை
பாத்தில் = வீடு
புடைவை = (புடைப்பெண் )வைப்பாட்டி /மகளிர் சீலை
உடை இன்னா = உடைமையாகக் கொள்வது
{புடைவை = புடைவை அணிந்த மகளிர் = மனைவி
உடை = மனதை உடைத்தல் = மனதைத் (அடி, வசவுகளால்) துன்புறுத்துதல்
வாங்கின்னா= வாங்கு + இன்னா = அடி ,வசவு + துன்பம் தரும் }
உரை :வீட்டில் வைப்பாட்டியை உடைமையாகக் கொள்வது துன்பம் தரும்.
(மனைவியின் மனதை அடி,வசவுகளால் துன்புறுத்துவது துன்பம் தரும்.)
(குறள் : அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
உரை : அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல் ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.)
காப்பாற்றா = பாதுகாக்க முடியாத
வேந்தனுலகு = அரசனின் நாடு
உடையின்னாது = உடை இன்னாது =செல்வம் தீங்கினைத்தருவது
உரை:தன் நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாத அரசனின் செல்வம் தீங்கினைத்தரும்
பொழிப்புரை :
அந்தணர் இல்லத்தில் கோழியும் நாயும் புகுவது துன்பம் தருவதாகும்.
உற்ற மனைவி கணவனுக்கு அடங்காதிருத்தல் துன்பம் தரும்.
வீட்டில் வைப்பாட்டியை உடைமையாகக் கொள்வது துன்பம் தரும்.

தன் நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாத அரசனின் செல்வம் தீங்கினைத்தரும்.

உரை : அந்தணர் இல்லத்தில் கோழியும் நாயும் புகுவது துன்பம் தருவதாகும்

No comments:
Post a Comment